பசுமைப் பள்ளிவாசல்கள் என்ற திட்டத்தின் கீழ் மதீனாவில் 100,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் துறை அமைச்சர், மேதகு ஷேக் டாக்டர் லத்தீஃப் பின் அப்துல்அஜிஸ் அல் அல்ஷேக் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.
அமைச்சர் அவர்கள் மதீனா பிராந்தியத்தில் அமைச்சகத்தின் துறைகளை ஆய்வு செய்யும் போது, “எங்கள் பள்ளிவாசல்கள் பசுமை” (Our Mosques Are Green) என்ற புதிய சுற்றுச்சூழல் திட்டத்தையும், நடப்பு ஆண்டிற்கான தன்னார்வத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இதன்படி மதீனாவில் உள்ள பள்ளிவாயில்களைச் சூழ 100,000 மரக் கன்றுகள் நடப்படவுள்ளன.










