காஸாவையும் அழித்து பலஸ்தீனத்தையும் அழித்து தனது நாட்டையும் அண்டை நாடுகளின் இருப்பையும் கேள்விக்குட்படுத்தி அழிவுகளை அதிகரித்துக்கொள்ளாத எழுந்த பிரச்சினையை பலஸ்தீனுக்கும் பலஸ்தீன மக்களுக்கும் சாதகமாக பயன்படுத்தும் அடிப்படையில் ஸவுதி மேற்கொண்ட சாத்வீக வழிப்போராட்டம் தற்போது வெற்றி நடை போடுகின்றது பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க உலக நாடுகள் போட்டி.
அல்லாஹ்வின் உதவிக்கு அடுத்ததாக ஸவுதி அரேபியாவின் பெரும் முயற்சியால் சர்வதேச அரங்கில் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கான உலகளாவிய போட்டி வேகமாக நடந்து வருகிறது. இது தனிநாட்டுக்கான முன்னெப்போதுமில்லாத சாத்தியங்களை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகள் தீர்வே பிராந்திய அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் அடித்தளம் என ஸவுதி அரேபியாவின் இராஜதந்திர முயற்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதன் விளைவாக, பல முக்கிய நாடுகள் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன:
பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, நோர்வே, இத்தாலி, மெக்சிகோ, நியூசிலாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், அயர்லாந்து, ஸ்லோவேனியா, மால்டா, டிரினிடாட் டொபாகோ, கூடவே பிரான்ஸ் போன்ற நாடுகளும் இணைந்துள்ளன. இது பலஸ்தீனப் பிரச்சினை குறித்த சர்வதேச நிலைப்பாட்டில் ஒரு பெரிய மாற்றத்தைக் எடுத்துக்காட்டுகிறது. மேலும், ஒரு நியாயமான,விரிவான அமைதியை அடைய உலகளாவிய ஆதரவைத் திரட்டுவதில் ஸவுதி அரேபியா வெற்றி கண்டிருப்பதை இது உறுதிப்படுத்துகின்றது.
உலகில் மனித நேயமுள்ள ஒவ்வொரு நாடும் இன்று போட்டி போட்டுக்கொண்டு இந்த தீர்வை அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சிக்கின்றன.








