2023.10.07ல் ஈரானின் உதவியுடன் ஹமாஸினால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் தொடர்பில் இன்னும் விடை தெரியாத பல கேள்விகள் இருக்கவே செய்கின்றன கடும்போக்காளர்கள் இதை விமர்சித்தாலும் உண்மைகளை அறிந்துகொள்ளவும் நிகழ்வுகளை எடைபோடவும் கேள்விகள் மிக முக்கியமானவையாகும்…
01. பல அடுக்கு முறைகளில் மிகவும் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டிருந்த இஸ்ரேலின் எல்லை வேலிகளைத் தாண்டி எப்படி ஹமாஸினால் தாக்க முடிந்தது.?
02. கிட்டத்தட்ட ஒரு இலட்ச்சம் மக்கள் கொலை செய்யப்பட்டு, காஸா முழுக்க சுடுகாடான பின்னும் நாங்கள் வெற்றியடைந்தோம் எனும் ஹமாஸ் மற்றும் அதன் ஆதரவாளர்களின் பரப்புரைக்கு அர்த்தம் என்ன?
03. உலகமே அவஸ்தைப்படும் அழிவுகளை சம்பாதித்த பின்னர் போர் நிறுத்தத்திற்கு நாங்கள் தயார் அதற்காக எந்த நாடு முயற்சித்தாலும் அதற்கு நாங்கள் ஒத்துழைப்போம் என்று ஹமாஸ் பல தடவைகள் அறிவித்துள்ளது அப்படி என்றால் எதற்காக இந்தப் போராட்டத்தை ஹமாஸ் ஆரம்பித்தது? ஈரான் தனது சில அஜந்தாக்களுக்காக காஸா மக்களை பலி கொடுத்ததா?
04. தான் விரும்பிய நாட்டில் விரும்பியவர்களை துள்ளியமாகத் தாக்கும் இஸ்ரேலுக்கு மிகவும் குருகிய எல்லைக்குள் இருக்கும் ஹமாஸின் சுரங்கங்கள் தெரியாதிருப்பதன் மர்மம் என்ன?
05. மிகவும் தொலைவில் பரந்த நிலப்பரப்பில், பல அடுக்கு பாதுகாப்புக்குள் வசிக்கும் ஈரானின் தலைவரின் நகர்வுகளை நாங்கள் அவதானித்து வருகிறோம் அவரை கொலை செய்வது எங்களுக்கு மிகவும் இலகுவானது என்று சொல்லும் அமெரிக்காவுக்கு காஸா எனும் குருகிய நிலப்பரப்பில் இரண்டு மூன்று இஸ்ரேலியர்களை வைத்திருக்கும் இடம் தெரியாமல் இருப்பதன் அர்த்தம் என்ன?
06. ஒவ்வொரு முறையும் போராட்டம் சந்தர்ப்பங்களிலும் மிகவு அழகிய புதிய வாகணங்களில் ஹமாஸ் உலா வருகிறது பெரிய அளவிலே கூட்டங்களை நடத்துகிறார்கள். ஹமாஸுக்கு இந்த வாகணங்கள் எப்படி கிடைக்கிறது? ஹமாஸை அளிக்க துடிக்கும் இஸ்ரேல் ஏன் இவ்வாரான கூட்டங்களை இலக்கு வைப்பதில்லை?
07. மிகவும் நவீன முறையில் யாருக்கும் தெரியாத அளவு பதுங்கு குழிகளை அமைக்கத் தெரிந்த ஹமாஸுக்கு பொது மக்களை பாதுகாப்பதற்கு ஏன் சிந்திக்க தெரியவில்லை.?
08. இஸ்ரேலின் அணுமதி இல்லாது காஸாவில் எதுவும் நுழைய முடியாது என்ற நிலை பல தசாப்தங்களாக தொடரும்போது இராணுவ வாகனங்களும், மிகப் பெரும் ஆயுதங்களும், பெரும் நிதியும் ஹமாஸுக்கு எப்படி கிடைக்கிறது? அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் தங்கள் தேவைகளுக்காக ஹமாஸை வழர்த்ததா?
09. இஸ்ரேலின் அனைத்து தொழிநுட்ப்பங்களையும் தகர்ந்தெறிந்ததாக சொல்லப்படும் ஈரானில் துல்லியமாக எப்படி இஸ்ரேலால் தாக்க முடிந்தது.?
10. எல்லைகள் மிகவும் அதிக செலவில் ராடார்களால் பாதுகாக்கப்பட்டுள்ள கடாரில் துள்ளியமாக கூட்டம் நடந்த இடத்தை மாத்திரம் குறி வைத்து இஸ்ரேலால் எப்படி தாக்க முடிந்தது? பின்னால் உள்ள ஏற்பாடுகள் என்ன?
11. பலஸ்தீன் பலஸ்தீன் என்று முஸ்லிம் நாடுகளில் நர பலி வேட்டை ஆடிய ஈரானின் ஆயுதக் குழுக்கள் இஸ்ரேலை சுற்றியிருந்த போதும் ஏன் இஸ்ரேலைத் தாக்கவில்லை?
12. இஸ்ரேலை முழுமையாக அழிப்போம் என்ற ஈரான், வெறும் கோசங்களோடும் சில ட்ரோன்களோடும் தாக்குதலை மட்டுப்படுத்திக் கொண்டது ஏன்?
13. பலஸ்தீன மக்களை நேசிப்பதாகச் சொல்லும் ஈரான் ஏன் பலஸ்தீன மக்களுக்கு உணவு கொடுப்பதில் கவனம் செலுத்தாது இஸ்ரேலை போராடத் தூண்டும் சின்னத்தனமான தாக்குதல்களில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றது.?
14. நாளாந்தம் ரொகட்டுகளை இஸ்ரேலை நோக்கி வீசுவதாக சொல்லும் ஹவ்ஸிகளின் ரொக்கட்டுகளால் என்ன லாபம்? இஸ்ரேலின் இராணுவத் தலைவர்களை எங்களால் இலக்கு வைக்க முடியும் என்று இன்று வரை சொல்லும் ஹவ்ஸிகள் ஏன் அதை வெற்று வார்த்தைகளாகவே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?
15. பலஸ்தீனை முழுவதுமாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் காரணங்களை உருவாக்கிக் கொள்ள இந்த ஆயுதக் குழுக்களை பயன்படுத்திக் கொள்கிறதா?
உண்மையில் இவ்வாரான கேள்விகள் ஒரு சாமான்ய மனிதனுக்கு இந்தக் தாக்குதல்கள் பற்றிய செய்திகளை தொடர்ந்து அவதானிக்கும்போது எழும் கேள்விகளாகும். இவற்றை சரியாக சிந்தித்தால் மத்திய கிழக்கில் திரை மறைவில் நடக்கும் சதிகளையும், மூடி அறைக்குள் நடக்கும் பேரம் பேசல்களையும் ஓரளவு யுகிக்க முடியும்.








