தெளிவற்ற முஸ்லிம் தலைவர்கள்.
மார்க்கத்திலும் ஒற்றுமையில்லை
அரசியல் நிலைப்பாடுகளிலும் ஒற்றுமையில்லை.
அடுத்த நாடுகளுடன் உறவை எவ்வாறு வைத்துக்கொள்வது என்பதிலும் ஒற்றுமையில்லை.
இஸ்ரேலுடன் உள்ள தொடர்புகளை மீள்பரிசீலனை செய்வதிலும் ஒற்றுமையில்லை.
ஈரானை நம்பிய ஹமாஸ் காஸாவை அழித்தது.
இந்த நிலையில் ஸவுதியை பலரும் விமர்சிக்கும் நிலை உருவாகியுள்ளது, என்னமோ அனைத்துக்கும் ஸவுதிதான் பொறுப்பு என்பதுபோல் இவர்களின் நிலை உள்ளது. உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் இருக்க அவை அனைத்தையும் விட்டு விட்டு ஸவுதியை மாத்திரம் இவர்கள் பேசுவது எந்தவகையிலும் நியாயமற்றதாகும்.
ஸவுதி நிலமையை சரியாக கணக்கிட்டு தன்னைப் பாதுகாத்துக்கொள்வதோடு அடுத்தவர்களுக்கு தன்னால் முடியுமானதைச் செய்துவருகின்றது. பலஸ்தீனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்கின்றது.








