பிரச்சினைகள் நிறைந்த இக்காலத்தில் பலஸ்தீனை இரண்டு நாடுகளாகப் பிரித்து நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் மசோதா அரச தலைவர்களுக்கிடையில் 22ஆம் திகதி ஐ.நா. சபையில் பேசப்பட இருக்கிறது ஏற்கனவே 145 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இம்மாநாட்டுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பலஸ்தீனத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் இம்மாநாட்டில் கலந்துகொள்ள விசா வழங்கப்படவில்லை இன்னிலையில் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் இம்மாநாட்டில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தொலைபேசி ஊடாக அல்லது வீடியோ கோல் ஊடாக மாநாட்டில் கலந்துகொள்வதற்கான பிரேரனையை ஐ.நா. சபையில் ஸவுதியின் குழுவினரால் முன்வைக்கப்பட்டது இதற்கு ஐ.நா. சபையில் ஏகோபித்த அடிப்படையில் அணுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆபத்துக்கள் நிறைந்திருக்கும் காலத்தில் முன்னர் பலஸ்தீன விவகாரத்தில் மன்னர் பைஸலைப் பறிகொடுத்ததைப்போலவே அவரது பேரனையும் இளக்க தயாரில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாகவே தோன்றுகின்றது. அத்தோடு அமெரிக்காவிற்கான பயணமொன்றை மேற்கொள்ளுமாறு ட்ரம்ப் விடுத்த அழைப்புக்கும் இளவரசர் இது வரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.








