
மன்னர் சல்மான் மனிதாபிமான நிறுவனத்தின் இலவச கண் சிகிச்சை முகாம் சம்மாந்துறையில் இலங்கையின் கிழக்கு மாகாணம் சம்மாந்துரையில் நடைபெற்று வருகின்றது.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை வைத்தியசாலையில், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான நிறுவனத்தின் நிதியுதவியுடன், கண் பார்வை குறைபாடு மற்றும் அது தொடர்பான நோய்களுக்கான இலவச சத்திரசிகிச்சை முகாம் இன்று (17.09.2025) ஆரம்பமானது. நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இம்முகாம், செப்டெம்பர் 20, 2025 வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இம்முகாமின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வில், இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் கௌரவமிகு உஸ்தாத் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள் கலந்துகொண்டு, அனைத்துப் பணிகளையும் பார்வையிட்டு, சிறப்பான ஏற்பாடுகளை உறுதிசெய்தார்.
இந்த மனிதாபிமான உதவி, கண் பார்வை குறைபாடுள்ள நோயாளிகளுக்குப் பெரும் ஆறுதலை அளிப்பதுடன், சவூதி அரேபிய அரசு இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவையும் எடுத்துக்காட்டுகிறது.











