
சவுதி இஸ்லாமிய விவகாரங்கள் வழிகாட்டல் அமைச்சர் அஷ்ஷேய்க் கலாநிதி அப்துல் லத்தீஃப் பின் அப்துல் அஸீஸ் ஆலுஷ் ஷேய்க் அவர்களின் மேற்பார்வையின் கீழ், தாய்லாந்தில் நடைபெற்ற இரண்டாவது அல்குர்ஆன் மனனப் போட்டி நேற்று (19 ரபிஉல் அவ்வல் 1447 ஹிஜ்ரி) வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இப்போட்டியானது, தாய்லாந்து இஸ்லாமிய விவகாரங்களுக்கான தலைமைக் காரியாலயம் மற்றும் பாங்கொக்கிலுள்ள இஸ்லாமிய கலாசார மையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாடு முழுவதிலுமிருந்து 300க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இப்போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு, உலகெங்கிலும் குர்ஆன் மனனத்தை ஊக்குவிக்கவும், இஸ்லாமிய அறிவை வளர்க்கவும் அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.








