பிரத்தானிய இஸ்ரேலை உருவாக்கிய நாடு அமெரிக்கா அதை ஆதரிக்கின்ற உதவுகின்ற பாதுகாக்கின்ற நாடு இந்நிலையில் காஸா மீதான இஸ்ரேலின் அடுக்கடுக்கான தாக்குதலும் அதை அரபு நாடுகள் குறிப்பாக ஸவுதியின் தலைமையில் எதிர்கொள்ளும் விதமும் இஸ்ரேலுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன இம்மாதம் ஐ.நா.சபையில் பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மாணம் வர இருக்கும் நிலையில் இஸ்ரேலை எதிர்க்கும் நாடுகள் ஒவ்வொரு நாளும் சந்தர்ப்பங்களிலும் அதற்கு எதிரான அறிக்கைகளை விட்டு வருகின்றனர்.
குறிப்பாக பிரித்தானியாவும், பிரான்ஸும் இஸ்ரேலின் அண்மைய தாக்குதல்களை மிகவும் வண்மையாக கண்டித்து அறிக்கையிட்டுள்ளன. உலகின் அனுவாயுத் வல்லரசாகவும் ஐ.நா.வில் வீட்டோ அந்தஸ்துள்ள நாடுகளாகவும் இருக்கும் ஐந்து நாடுகளில் நான்கு நாடுகள் பலஸ்தீன சுதந்திர தேசத்தை உருவாக்க ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா மாத்திரம் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது அதற்கு எதிராக இந்த முயற்சி வெற்றி பெருமா? அல்லது அதுவும் வெளிப்படையாக அல்லது மறைமுகமாக ஆதரிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…








