36 ஆண்டுகளாக உலகெங்கும் இலவசக் கண் சிகிச்சையளிக்கும் சவுதி மருத்துவர்!
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவர் டாக்டர் ஆதில் அல்-ரஷூட், கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வாழ்க்கையை கண் பார்வையை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒளியூட்டுவதற்காக அர்ப்பணித்துள்ளார்.
தான் கற்ற மருத்துவ அறிவை பணம் ஈட்டுவதற்கான கருவியாகப் பயன்படுத்தாமல், சேவைக்கான ஒரு பாதையாக மாற்றியுள்ளார். “மனிதநேயத்திற்கு எல்லைகள் இல்லை” என்பதை தனது செயல்கள் மூலம் நிரூபித்துவரும் டாக்டர் ஆதில், உலகம் முழுவதும் பயணித்து, கண் பார்வையை இழந்த ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து வருகிறார். இதற்காக எந்த ஒரு பிரதிபலனையும் அவர் எதிர்பார்ப்பதில்லை; அல்லாஹ்வின் அருளை மட்டுமே நாடி இந்த உயரிய சேவையை செய்து வருகிறார்.
அவரது இந்த அர்ப்பணிப்பு, சவுதி அரேபியாவின் பெருமையை உலக அரங்கில் எடுத்துக்காட்டுகிறது.
செல்வத்தையும், புகழையும் தேடி அலையும் உலகில், தன்னலமற்ற சேவை மூலம் மனிதர்களின் இதயங்களில் ஒளியேற்றும் டாக்டர் ஆதில் அல்-ரஷூட்டைப் போன்ற மனிதநேய சிற்பிகள் இருப்பது, இந்த பூமி இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கான சான்றாக உள்ளது.






