
ஸவுதி அரேபியா எண்ணை வழமிக்க உலகிற்கு எண்ணை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடு என்பதே பலரும் அறிந்த விடயமாகும் இதனால் அதன் பொருளாதாரம் பெரும்பாலும் எண்ணை ஏற்றுமதியிலேயே தங்கியிருந்தது தற்போது அன்னிலை மாறி தனக்குத் தேவையானவற்றை தானே உற்பத்தி செய்துகொள்ளும் நிலை ஸவுதியில் வேகமாக உருவெடுத்து வருகின்றது… பெற்றோலியம் அல்லாத உற்பத்திப் பொருட்களால் வருடாந்தம் கிடைக்கும் வருமானம் ஸவுதியில் அதிகரித்து வருகின்றது…
1936களிலிருந்து இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அது தற்போது வேகமாக வழர்ந்து வருகின்றது. ஸவுதியில் பெற்றோலிய வழம் கண்டுபிடிக்கப்பட்டதும் இதன் முயற்சிகள் அதிகரிக்கப்பட்டாலும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானின் 2030 தொலைநோக்குத் திட்டம் அதை மென்மேலும் துரிதப்படுத்தியுள்ளது. இளவரசர் இத்திட்டத்தின் ஊடாக 230ஆயிரம் வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதுடன் 2030ஆம் ஆண்டளவில் 460 பில்லியன் ரியால்களை ஸவுதி பெற்றோலிய உற்பத்தி தவிர்ந்த துறைகளிலிருந்து சம்பாதிக்க வேண்டும் என்பது அதன் இலக்காகும். உலகத்தில் ஸவுதி அரேபியாவின் வகிபாகம் மற்றும் அதனிடமுள்ள வழங்கள் மிக விரைவாக இந்த இலக்கை அது அடைய உதவும் என்பதில் எவ்வி சந்தேகமுமில்லை.