

மக்களுக்கு சேவை செய்வதில் சவுதி அரேபியாவின் மன்னரும், பட்டத்து இளவரசரும் கொண்டுள்ள அக்கறையின் அடிப்படையில், பாலஸ்தீன சகோதர மக்களுக்கு உதவும் வகையில், கிங் சல்மான் நிவாரண மையம், சவுதி பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து 62-வது நிவாரண விமானத்தை எகிப்தின் அல்-அரீஷ் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அனுப்பியுள்ளது.

இந்த விமானம் உணவுப் பொருட்களுடன், மிக விரைவில் காஸா பகுதிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. காஸா மக்கள் எதிர்கொண்டுள்ள கடும் பஞ்சம் இக்கட்டான வாழ்க்கைச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த உதவி அவர்களுக்கு பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிங் சல்மான் நிவாரண மையம் வழியாக தொடர்ந்து வழங்கப்படும் இந்த உதவிகள், சவுதி அரேபியா பாலஸ்தீன மக்களுக்கு வழங்கி வரும் ஆதரவின் தொடர்ச்சியாகும்.
இந்த உதவிகள், காஸா மக்கள் அனுபவித்து வரும் துயரங்களைக் குறைக்கும் நோக்கில் வழங்கப்படுகின்றன.