
ஸவுதியின் இராணுவ செலவீனங்களைக் குறைப்பதற்காக ஸவுதி இராணுவத்திற்கு தேவையான தளபாடங்களை ஸவுதியிலேயே தயாரித்தல் அதற்கான தொழிநுட்பத்தை ஏனைய நாடுகளிடமிருந்து கொள்முதல் செய்து ஸவுதி இளைஞர் யுவதிகளை அதில் பயிற்றுவித்தல், குறித்த தொழிநுட்பத்தை நவீனமயப்படுத்துவதற்கு தேவையான முயற்சிகளை செய்யும் திட்டத்தில் ஸவுதி மிகத் தீவிரமாக உழைத்து வருகின்றது..
மத்திய கிழக்கின் சிங்கமான ஸவுதி அடுத்தவர்களின் தயவில் வாழ்வதைத் தவிர்த்து சுயமாக தன்னை உருவாக்கிக் கொள்ளும் வகையில் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானின் 2030 திட்டத்தில் கடினமாக உழைத்து வருகின்து. அந்த அடிப்படையில் முதல் தடவையாக ஸவுதியின் உற்பத்தி செய்யப் பட்ட இராணுவ ரக்கள் நைஜீரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது..