உலகில் Ai பயன்பாட்டில் ஸவுதிக்கு 3ஆம் இடம்.

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக (Ai) செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தை உலகில் அதிகம் பயன்படுத்தும் 3ஆவது நாடாக ஸவுதி தெரிவாகியுள்ள நிலையில் எதிர்காலத்தில் இதன் அவசியத்தையும் தேவையையும் உணர்ந்த ஸவுதி எல்லாத் துறைகளிலும் இதனை உட்புகுத்தியுள்ளதுடன் அனைத்து தரத்திலும் இதை ஒரு பாடத்திட்டமாக போதிக்க முயற்சிக்கின்றது. அத்தோடு சமூக மட்டத்தில் இதன் தேவையை உணர்த்த பல்வேறு முயற்சிகளிலும் இறங்கியுள்ளது.

ஸஊதி தரவுத்துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு சபை (SDAIA), கல்வித்துறை மற்றும் மனிதவள & சமூக மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (AI) கற்றலை ஊக்குவிக்கும் “SAMAI” எனும் தேசிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டம் “Back to School” பிரசாரத்தின் ஓர் அங்கமாகும். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித் தலைவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் திறன்களை எளிதில் அறிமுகப்படுத்தி, அவர்களின் திறன்களை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.

முக்கிய அம்சங்கள்:

🔹️தேசிய பாடத்திட்ட மையத்துடன் இணைந்து, வயதுக்கேற்ற வகுப்பறை இடைமுகக் கல்வி அலகுகள் உருவாக்கம்.

🔹️செயற்கை நுண்ணறிவு அடிப்படைகள் முதல் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் வரை கற்றல் வாய்ப்பு.

🔹️ஒரு மில்லியன் ஸஊதி குடிமக்கள் AI துறையில் பயிற்சி பெறுவதை இலக்காகக் கொண்ட திட்டம்.

🔹️Vision 2030 இலக்குகளை முன்னெடுத்து, உலகளாவிய போட்டியில் முன்னிலை வகிக்கும் அறிவுத்தளம் உருவாக்கம்.

இந்த முயற்சி, ஸஊதி அரேபியாவின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.

  • Related Posts

    ஸவுதியின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட 7 பெருந் திட்டங்கள்…

    சவூதி அரேபியா, தேச ஒருங்கிணைப்புக்குப் பிறகு, நாட்டின் வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பொருளாதாரம், வர்த்தகம், மத வழிபாட்டு மையங்களில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்திய ஏழு முக்கியத் திட்டங்களைப் பற்றிய தகவல்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. 7 முக்கியத் திட்டங்களும் அதன்…

    மாறிவரும் ஸவுதியின் அழகு

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    வேகமாக நடைபெறும் காஸா மக்களுக்கான நிவாரணப் பணிகள்.

    ஆப்கானிஸ்தான் மக்களை குசிப்படுத்திய மன்னர் ஸல்மான் நிவாரண மையம்.

    ஸவுதியின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட 7 பெருந் திட்டங்கள்…

    ஸவுதியின் முன்னேற்றத்திற்கு வித்திட்ட 7 பெருந் திட்டங்கள்…

    மாறிவரும் ஸவுதியின் அழகு

    முயற்சித்தோருக்கு பாராட்டு முன்னேருவோருக்கு கைகொடுப்பு..

    முயற்சித்தோருக்கு பாராட்டு முன்னேருவோருக்கு கைகொடுப்பு..

    வருடாந்த அரச உரையில் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலு ஸுஊத் அவர்கள்…

    வருடாந்த அரச உரையில் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலு ஸுஊத் அவர்கள்…