சவுதி இளவரசர் அவர்கள் கூறியதாவது:
“பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கும், பதற்றங்கள் மற்றும் மோதல்களின் விளைவுகளிலிருந்து பிராந்தியத்தைக் காப்பதற்கும், முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்குமான எங்களது பங்களிப்பின் தொடர்ச்சியாக; பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதில் நமது பங்கை ஆற்றுவதற்கான கூட்டு முயற்சிகளின் அடிப்படையில், சவுதி அரேபிய இராச்சியம், துருக்கியக் குடியரசு மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு ஆகியவற்றுக்கு இடையே ‘மக்கா பாதுகாப்பு கூட்டணி’ (Makkah Defense Alliance) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில், சவுதி அரேபியாவுக்கு உறுதுணையாக நிற்கும் சகோதர மற்றும் நட்பு நாடுகளின் நிலையை நாங்கள் பாராட்டுவதோடு, அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் வலுப்படுத்துவதில் அவைகளின் பங்களிப்புகளையும் மதிக்கிறோம்.”
#ஷூரா_மன்றத்தில்_மன்னரின்_உரை#சவுதிஅரேபியா#மக்கா_பாதுகாப்பு_கூட்டணி#இளவரசர்#செய்திகள்






