

ஸவுதி செளிவிவகார அமைச்சர் இளவரசர் பைஸல் பின் பர்ஹான் உத்தியோக புர்வ விஜயமாக ஜேர்மனியை இன்று சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பிராந்தியத்தின் முக்கிய விடயங்கள் பற்றி இச்சந்திப்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜேர்மன் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ள இளவரசர் பலஸ்தீன் விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஏற்கனவே பலஸ்தீன பிரிப்புக்கு ஆதரவளிப்பதாக ஜேர்மன் தெரிவித்துள்ள நிலையில் செப்டம்பர் மாநாடு நெருங்கும் நிலையில் அமைச்சரின் இப்பயணம் முக்கியத்துவம் பெருகின்றது.