அண்டை நாடுகளை கைவிடாத ஸவுதி அரேபியா…

ஸவுதி வரலாற்று நெடுகிலும் ஒப்பந்தங்களைப் பாதுகாக்கும் நாடு என்று பெயர் பெற்றது சர்வதேச ரீதியாக அடுத்த நாடுகளின் நம்பிக்கையை அது தக்க வைத்துள்ளது. யாவரும் அறிந்ததே.

அதை விடவும் அதிகமான அண்டை நாடுகளை பாதுகாப்பதிலும் கருத்து முரண்பாடுகளை மறந்து தேவையான சந்தர்ப்பங்களில் உதவுவதும் ஸவுதியின் மாறாத பன்பாக இருந்துவருகின்றது.

குவைத்துக்கு எதிராக ஸதாம் போராடியபோது குவைத் நாட்டவருக்காக தன் நாட்டின் அனைத்து வழங்களையும் திறந்துகொடுத்தது ஸவுதி அவர்களின் பிரச்சினை முடியும் வரை அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்ததோடு அவர்களின் நாட்டை மீட்டு உரியவர்களிடம் ஆட்சியையும் ஒப்படைத்து அவர்களையும் தங்கள் நாடுகளுக்கு கௌரவமாக திருப்பி அனுப்பியது.

பஹ்ரைனில் பிரச்சினை என்றபோது அவர்களுக்கும் அவ்வாறான உதவிகளைச் செய்தது.

இதன் தொடரில் தற்காலத்தில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினையில் கப்பல் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான ஹுர்முஸ் ஜல சந்தி மூடப்பட்டு பொருளாதார ரீதியான நெருக்கடியும், தேவையான அத்தியவசியப்பொருட்களை நாட்டுக்குள் தருவிக்க முடியாத நிலையும் உருவாக்கப்பட்டு, எல்லா நாடுகளும் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இவ்வாறு ஒன்று எதிர்காலத்தில் நடந்தால் அடுத்த தீர்வு என்ன என்பதை முற்கூட்டியே சிந்தித்து எம்புஃ துறைமுகத்தை ஏற்பாடு செய்திருந்த ஸவுதி அரேபியா இன்று அதைப் பயன்படுத்தி மத்திய கிழக்கில் நிர்க்கதியாகியுள்ள நாடுகளுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தங்கு தடையின்றி வழங்கிக் கொண்டிருக்கின்றது.

நாடுகள் தாக்கப்பட்டபோதும் அங்கு வாழ்கிறவர்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாது வாழ்ந்கிறார்கள் என்றால் அது ஸவுதியின் இந்தப் பரந்த திட்டமிடல் மற்றும் அதைப் பயன்படுத்தி தரைமார்க்கமாக அடுத்த நாடுகளுக்கு தேவையான பொருட்களை இரவு பகலாக அனுப்புவதுமே பிரதான காரணமாகும்.

ஸவுதிக்கு எமிரேட்ஸுடன், கடாருடன் முரண்பாடுகள் உள்ளது ஆனால் இந்த பிரச்சினையான காலத்தில் அதைப் பார்க்கக்கூடாது என்ற அடிப்படையில் அவைகளுக்கு தேவையானவை தங்கு தடையின்றி சென்றுகொண்டிருக்கிறது துறைமுகத்தில் ஒவ்வொரு பகுதி ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஸவுதியின் விமான நிலையங்களும் ஒவ்வொரு நாடுகளின் தேவைகளுக்காகவும் பிரித்துக்கொடுக்கப்பட்டுள்ளது. ஸவுதியின் இந்தப் பரந்த சேவையும் விரிந்த மனதும்தான் இவ்வளவு காலமாக ஸவுதியுடன் அண்டை நாடுகளை கட்டிப்போட்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

https://www.facebook.com/share/v/1U22cj3NGH
https://www.facebook.com/share/v/1U22cj3NGH
https://www.facebook.com/share/v/1U22cj3NGH
  • Related Posts

    நாகரீகம் தெரியாத ஈரான் தலைமைகள் பொறுமைகாக்கும் அரபு நாடுகள்…

    ஈரானுக்கு எதிராக அமெரிக்க இஸ்ரேல் கூட்டு தொடுக்கும் யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை ஈரான் தாக்கிய ஏவுகனைகள் மொதத்தை ஆறாக பிரித்தால் அதில் ஐந்து மடங்கை அரபு நாடுகளுக்கு எதிராகவும் ஒரு மடங்கை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு எதிராகவும் ஏவியுள்ளது. ஆனால், தன்னை…

    Read more

    • AdminAdmin
    • 2030
    • February 23, 2026
    • 85 views
    • 1 minute Read
    2-வது கட்டத்தைத் தொடங்கி வைத்தார் பட்டத்து இளவரசர்

    சவூதி அரேபியா முழுவதும் உள்ள 130 வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசல்களைப் புனரமைக்கும் ‘இளவரசர் முஹம்மது பின் சல்மான் திட்டத்தின்’ (Prince Mohammed bin Salman Project for the Development of Historical Mosques) 2-வது கட்டத்தை, பட்டத்து இளவரசர் முஹம்மது…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    • By Admin
    • October 15, 2026
    • 13 views
    சூடானில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை மேம்படுத்திய மன்னர் சல்மான் நிவாரண மையம்

    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    • By Admin
    • October 15, 2026
    • 21 views
    காஸாவில் 5 லட்சம் லிட்டர் சுத்தமான குடிநீரை விநியோகித்த மன்னர் சல்மான் நிவாரண மையம்

    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,440 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த 9 சவுதி நிவாரண வாகனங்கள்

    • By Admin
    • October 15, 2026
    • 16 views
    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,440 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த 9 சவுதி நிவாரண வாகனங்கள்

    சவுதி விண்வெளி நிறுவனம் மற்றும் KAUST: அல்சைமர் நோய்க்குத் தீர்வு காண விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரியல் மாதிரிகள்

    • By Admin
    • October 15, 2026
    • 11 views

    காஸாவின் கான் யூனிஸில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் அவசர உதவி

    • By Admin
    • October 13, 2026
    • 14 views
    காஸாவின் கான் யூனிஸில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மன்னர் சல்மான் நிவாரண மையத்தின் அவசர உதவி

    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,200 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த சவுதி நிவாரண வாகனங்கள்

    • By Admin
    • October 13, 2026
    • 14 views
    ஏமனின் ஏடன் மாகாணத்திற்கு 3,200 உணவுப் பொதிகளுடன் சென்றடைந்த சவுதி நிவாரண வாகனங்கள்