மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் தலைவர் (துணைவேந்தர்) டாக்டர் சாலிஹ் பின் அலி அல்-அக்லா அவர்கள், சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், தஃவா மற்றும் வழிகாட்டல் துறை அமைச்சர் மாண்புமிகு ஷேக் டாக்டர் அப்துல் லத்தீப் பின் அப்துல் அஸீஸ் ஆல்-ஷேக் அவர்களை இன்று பல்கலைக்கழக வளாகத்தில் வரவேற்றார்.
இந்தச் சந்திப்பின் போது, இரு தரப்பினருக்கும் இடையே சுமூகமான உரையாடல்கள் இடம்பெற்றன. பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கலாக ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயன்படும் வகையிலான கூட்டு ஒத்துழைப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இஸ்லாமியப் பல்கலைக்கழகம் பெற்றுள்ள தனித்துவமான இடத்தைப் பாராட்டிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள், கல்விப் பணியில் இந்தப் பல்கலைக்கழகம் கொண்டுள்ள சர்வதேச அளவிலான முன்னோடிப் பங்களிப்பையும் வெகுவாகப் புகழ்ந்தார். இச்சந்திப்பானது கல்வி மேம்பாடு சார்ந்த அடுத்தகட்ட நகர்வுகளுக்கு முக்கிய அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலதிக விவரங்களுக்கு:






