பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகளும், தீவிரவாதக் குடியேற்றவாசிகளும் தொடர்ந்து நடத்தி வரும் மீறல்களுக்கு சவுதி அரேபிய இராச்சியம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
சமீபத்திய நிகழ்வாக, புனித அல்-அக்ஸா மஸ்ஜிதின் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள தொழுகையாளிகளை ஆத்திரமூட்டிய செயலையும், அத்துடன் (மற்றொரு) அல்-ஹாஜ்ஜா மஸ்ஜித் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலையும் சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் வன்மையாகக் கண்டிக்கிறது.






