சூடானியச் சகோதரர்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியாக, சவுதி அரேபியா இராச்சியம் சூடானில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகித்தது.
இந்த மனிதாபிமான உதவி, மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (King Salman Humanitarian Aid and Relief Centre – KSrelief) மூலம் வழங்கப்படுகிறது. இது போரால் இடம்பெயர்ந்த மற்றும் கடினமான சூழ்நிலைகளில் வாழும் சூடானிய மக்களின் துயரத்தைப் போக்கும் சவுதி அரேபியாவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.






