அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், காசாப் பகுதியில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, பாலஸ்தீனத்தின் “ஹமாஸ்” இயக்கம் தொடர்ந்து மக்களைக் கொன்றால் அதன் உறுப்பினர்களைக் கொல்லப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
ட்ரம்ப் கூறுகையில், “ஒப்பந்தத்தில் இல்லாத நிலையில், ஹமாஸ் தொடர்ந்து காசாவில் மக்களைக் கொன்றால், நாங்கள் (பகுதிக்குள்) நுழைந்து அவர்களைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவின் (US Central Command) தளபதி பிராட் கூப்பர், ஹமாஸை துப்பாக்கிச் சூட்டை நிறுத்தவும் மற்றும் ட்ரம்ப்பின் திட்டத்தைச் செயல்படுத்த இணங்கவும் கோரினார்.





