வேதியியலுக்கான நோபல் பரிசு 2025: சவுதி விஞ்ஞானிக்குக் கௌரவம்

ஸ்வீடனின் அரச அறிவியல் அகாடமி இன்று (புதன்கிழமை), 2025 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை, சவுதி விஞ்ஞானி ஒமர் பின் முனிஸ் யாகிக்கு, மேலும் இரண்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து, “உலோக-கரிம கட்டமைப்புகளை (Metal-Organic Frameworks) உருவாக்கியதற்காக” வழங்குவதாக அறிவித்தது.

யாகி வெளியிட்ட 200 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் 60,000 முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

இந்த விருதை, ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகப் பேராசிரியரான சுசுமு கிட்டாகவா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகப் பேராசிரியரான ரிச்சர்ட் ராப்சன், மற்றும் அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரியும் ஓமர் யாகி ஆகியோருக்கு அகாடமி வழங்கியுள்ளது.

விருது பெற்ற இந்த மூன்று விஞ்ஞானிகளும், வாயுக்கள் மற்றும் பிற இரசாயனப் பொருட்கள் அதன் வழியாகப் பாய்வதற்கு வசதியளிக்கும் வகையில், அகலமான இடைவெளிகளைக் கொண்ட மூலக்கூறு அமைப்புகளை உருவாக்கினர். இவை பாலைவனக் காற்றிலிருந்து தண்ணீரைக் பிரித்தெடுக்கவும், கார்பன் டை ஆக்சைடைப் பிடிக்கவும், நச்சு வாயுக்களைச் சேமிக்கவும் பயன்படுத்தப்படலாம்.

பரிசை வழங்கும் அகாடமி வெளியிட்ட அறிக்கையில், “உலோக-கரிம கட்டமைப்புகளை (MOFs) மேம்படுத்துவதன் மூலம், வெற்றியாளர்கள் வேதியியலாளர்களுக்கு நாம் எதிர்கொள்ளும் சில சவால்களைத் தீர்க்க புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்தப் பரிசானது, ஸ்வீடனின் அரச அறிவியல் அகாடமியால் வழங்கப்படுகிறது. வெற்றியாளர்கள் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர்ஸ் (1.2 மில்லியன் அமெரிக்க டாலர்) தொகையைப் பகிர்ந்து கொள்வதுடன், உலகின் மிக மதிப்புமிக்க அறிவியல் விருதை வென்றதன் மூலம் பரந்த புகழையும் பெறுகின்றனர்.


சவுதிப் பேராசிரியர் ஓமர் யாகி பற்றி:

  • பேராசிரியர் ஓமர் யாகி அவர்கள், பலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த ஜோர்டானியர் ஆவார். இவர் 2021 இல் சவுதி குடியுரிமையைப் பெற்றார்.
  • வேதியியல் மற்றும் அறிவியல் புத்தாக்கத் துறையில் சவுதி மற்றும் அரபு உலகின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
  • அவர் கிங் அப்துல் அஜிஸ் சிட்டி ஃபார் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜியின் தலைவருக்கு ஆலோசகராகவும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புத்தாக்க ஆணையத்தின் (Research, Development and Innovation Authority) நிர்வாகக் குழுவில் அறிவியல் ஆராய்ச்சிக்கான பிரதிநிதியாகவும் உள்ளார்.
  • 2015 ஆம் ஆண்டிற்கான கிங் பைசல் அறிவியல் பரிசையும், 2024 ஆம் ஆண்டுக்கான ‘அரபு மேதைகள்’ விருதையும் பெற்றவர்.
  • இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில் வேதியியல் துறைக்கான ஜேம்ஸ் அன்ட் விங் ச்சி பேராசிரியர் பதவி வகிக்கிறார்.
  • இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
  • 300 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், மேலும் 1998 முதல் 2008 வரை, இவரது படைப்புகள் அதிகளவில் மேற்கோள் காட்டப்பட்ட வேதியியல் அறிஞர்களில் இரண்டாவது நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • உலகளவில் 70 காப்புரிமைகளுக்கு இவரது உலோக-கரிம கட்டமைப்புகள் (MOFs) பற்றிய பணி காரணமாக அமைந்துள்ளது. இது வாயுக்களைச் சேமித்தல், பிரித்தல் மற்றும் ஊக்குவிக்கும் அறிவியலிலும் தொழில்நுட்பங்களிலும் முன்னேற்றத்திற்குப் பங்களித்தது.
  • சுத்தமான எரிசக்தி மற்றும் பொருள் அறிவியலில் உலகளாவிய முயற்சிகளை விரைவுபடுத்துவதற்காக, அரபு உலகம் மற்றும் ஆசியக் கண்டத்தில் உள்ள நிறுவனங்களுடன் பல சர்வதேச ஒத்துழைப்புப் பங்களிப்புகளுக்குத் தலைமை தாங்குகிறார்.
  • சமகால வேதியியல் துறைகளில் இளம் விஞ்ஞானிகளுக்கான ஆராய்ச்சி மையங்களை உருவாக்கவும், வாய்ப்புகளை வழங்கவும், பெர்க்லியில் உள்ள உலக அறிவியல் நிறுவனத்தின் (Berkeley Global Science Institute) நிறுவன இயக்குநராகப் பணியாற்றினார்.
  • Related Posts

    வெளிநாட்டு ஹஜ் சேவை அமைப்பில் மாபெரும் சீர்திருத்தம்

    சவுதி அரேபியாவில் வெளிநாட்டு ஹஜ் பயணிகளுக்கு சேவை வழங்கும் அமைப்பில் முக்கிய திருத்தங்களுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திருத்தத்தின்படி, 1440 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த “அர்பாப் அல்-தவாஇஃப் நிறுவனங்கள்” (شركات أرباب الطوائف) முழுமையாக ரத்து…

    Read more

    பிலிப்பைன்ஸ் சூறாவளி பாதிப்பு: அதிபர் மார்கோஸுக்கு மன்னர் சல்மான் இரங்கல்

    பிலிப்பைன்ஸ் குடியரசின் மத்தியப் பகுதியைத் தாக்கிய “கல்மேகி” (Kalmaegi) சூறாவளியினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக, அந்நாட்டின் அதிபர் மாண்புமிகு ஃபெர்டினாண்ட் ரொமுவால்டஸ் மார்கோஸ் ஜூனியர் அவர்களுக்கு, இரு புனிதத் தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவுத் அவர்கள்…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    சமாய் 2′ திட்டம் மற்றும் 40 புதிய படிப்புகள் அறிமுகம்! – SDAIA அறிவிப்பு

    • By Admin
    • January 28, 2026
    • 5 views
    சமாய் 2′ திட்டம் மற்றும் 40 புதிய படிப்புகள் அறிமுகம்! – SDAIA அறிவிப்பு

    ஏமனில் ஒரே வாரத்தில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம்: சவூதி அரேபியாவின் மனிதாபிமானப் பணிகள் தீவிரம்!

    • By Admin
    • January 27, 2026
    • 15 views
    ஏமனில் ஒரே வாரத்தில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம்: சவூதி அரேபியாவின் மனிதாபிமானப் பணிகள் தீவிரம்!

    ரியாத் வந்தடைந்த தான்சானியா இரட்டையர்கள்: சவூதி அரேபியாவில் அறுவை சிகிச்சைக்கான பரிசோதனை!

    • By Admin
    • January 27, 2026
    • 21 views
    ரியாத் வந்தடைந்த தான்சானியா இரட்டையர்கள்: சவூதி அரேபியாவில் அறுவை சிகிச்சைக்கான பரிசோதனை!

    ஏமனில் 70 மின் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தொடங்கியது: சவூதி அரேபியாவின் 81 மில்லியன் டாலர் உதவித் திட்டம்!

    • By Admin
    • January 27, 2026
    • 28 views
    ஏமனில் 70 மின் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தொடங்கியது: சவூதி அரேபியாவின் 81 மில்லியன் டாலர் உதவித் திட்டம்!

    சவூதி – போலந்து ‘ஒருங்கிணைப்பு கவுன்சில்’ அமைப்பு: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் குறித்து அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் முக்கிய அறிவிப்பு!

    • By Admin
    • January 27, 2026
    • 22 views
    சவூதி – போலந்து ‘ஒருங்கிணைப்பு கவுன்சில்’ அமைப்பு: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் குறித்து அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் முக்கிய அறிவிப்பு!

    தெற்கு காசா மாணவர்களுக்கு சவூதி அரேபியாவின் குளிர்கால அரவணைப்பு

    • By Admin
    • January 27, 2026
    • 19 views
    தெற்கு காசா மாணவர்களுக்கு சவூதி அரேபியாவின் குளிர்கால அரவணைப்பு