போராட்டம் என்பது அழிவுகளை கொண்டுவரக்கூடியது எனவே, அதற்கு செல்வதற்கு அதிகம் சிந்திக்க வேண்டும். போராடத்தான் வேண்டும் என்ற நிலை இருந்தாலும், சரியான தயார்படுத்தல் மற்றும் சக்தி இல்லாது போராட்டத்திற்கு செல்வதை அல்லாஹ் தடுத்துள்ளான் அதை தற்கொலை சமமான ஒரு பாவ காரியமாக குறிப்பிட்டுள்ளான்.
நபியவர்கள் மக்காவில் இருந்த போது அதிகமான அநியாயங்களை அனுபவித்தார்கள் அவர்கள் போராடவில்லை.
ஹுதைபியா உடண்படிக்கையின்போது மக்காவிலிருந்து வந்த ஒரு ஸஹாபி தன்னை மதீனாவுக்கு அழைத்து செல்லுமாறும் மக்காவாசிகள் செய்யும் அநியாயத்தையும் குறிப்பிட்டார் ஆனால் நபியவர்கள் அழைத்து செல்ல மறுத்தார்கள். தான் அழைத்து செல்ல முடிவெடுத்தால் மக்காவாசிகளுடன் குழம்பவேண்டி வரும் என்பது அவர்களுக்கு தெரியும் அதனால் அவ்வாறு செய்யவில்லை. இதற்காக அந்த முஸ்லிமை அவ்வளவு அவஸ்தைப்பட விட்டார்களா? அதற்கு அவருக்கு குற்றமுண்டா ? என்றால் இல்லை அல்லாஹ் எவருக்கும் அவருடைய சக்திக்கு மீறி பொறுப்புக்களை சுமத்துவில்லை.
எனவே, ஒக்டோபர் தாக்குதல் பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு தாக்குதலாகும்.








