ஸவுதி அரேபியா தனது 95ஆவது தேசிய தினத்தை 23.09.2025 செவ்வாய்க் கிழமை கொண்டாடுகின்றது. உலகின் மிகவும் செல்வந்த நாடுகளில் ஒன்றான ஸவுதி அரசியல் பொருளாதாரம் என்று அனைத்திலும் பெரும் செல்வாக்குச் செலுத்தும் நாடாக காணப்படுகின்றது.
ஸவுதி அரேபியாவின் பிரிந்துகிடந்த பல பிரதேசங்களையும் ஒற்றுமைப்படுத்தி அதை ஸவுதி அரேபிய இராச்சியம் என்ற பெயரில் கொண்டுவந்தவர் ஸவுதியின் நிறுவுனரான மன்னர் அப்துல் அஸீஸ் ஆலு ஸுஊத் (ரஹ்) ஆவார்கள். அவர் பல பிரதேசங்களை ஒன்றினைத்தது 1932.09.23ஆம் திகதியாகும் எனவே அந்த நாள் ஸவுதியின் தேசிய தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.
இதுவரை மன்னர் அப்துல் அஸீஸ் அவர்களின் ஐந்து பிள்ளைகள் தொடராக ஸவுதியை ஆட்சி செய்திருப்பதுடன் அவரது அடுத்த புதல்வரான மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆலு ஸுஊத் அவர்கள் ஆட்சி செய்துவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் ஸவுதி அரேபியாவின் எல்லா இடங்களும் இந்நிகழ்வை ஞாபமூட்ட பல்வேறு வழிகளில் தயாராகி வருகின்றது.







