
ஸவுதி அரேபியாவின் 64-வது நிவாரண விமானம் காஸாவுக்குச் சென்றடைந்தது. ஸவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் காஸாவில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவும் வகையில், 64-வது நிவாரண விமானத்தை காஸா பகுதிக்கு அனுப்பியுள்ளது. இந்த விமானம் அத்தியாவசியப் பொருட்களுடன் காஸா பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளது.
மன்னர் சல்மான் நிவாரண மையம் தொடர்ச்சியாக பலஸ்தீன மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது வந்து சேர்ந்திருக்கும் 64-வது விமானம், தொடர் நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாகும். இந்த நிவாரணப் பணிகள், பலஸ்தீன மக்களின் துயரைக் குறைப்பதற்கான ஸவுதி அரேபியாவின் அர்ப்பணிப்பிற்கான அடையாளமாகும்.








