உலகில் பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் செரிந்தும் பெருந்தொகையாகவும் வாழ்கின்றார்கள். இந்த நாடுகளின் வரிசையில் இஸ்லாமிய அரசாக விளங்கும் சவுதி அரேபியா இஸ்லாத்தை பாதுகாப்பதற்கும் அதனை உலகளவில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கும் அரும் பாடு படுகிறது. இந்த அடிப்படையில் உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களை அல்குர்ஆனை மனனம் செய்வதற்கும், மனனம் செய்தவர்களை குர்ஆனுடனான தொடர்பை பேனுவதற்கும் பல்வேறு நிகழ்ச்சி திட்டங்களும் குறிப்பாக அல்குர்ஆன் மனனப் போட்டி போன்றவற்றை நடாத்தி பல லட்சம் பெறுமதியான பரிசில்களும் வெற்றியாளர்களுக்கான பல்வேறு சிறப்பு கௌரவிப்புகளையும் செய்து வருகிறது.
இஸ்லாமிய அடையாளங்களை பாதுகாக்கும் விடையங்களிலும் அதிக அக்கரை கொண்ட ஒரு தனித்துவமான நாடு சவுதி அரேபியா என்றால் அது மிகையாகாது. உலகில் பல்வேறு நாடுகளிலும் நவீன வசதிகள் கொண்ட பள்ளிவாயல்களை அமைத்தல் மற்றும் மார்க்க போதனை செய்யும் கல்வி நிறுவனங்களை அமைத்தல், உலகம் முழுவதிலும் இஸ்லாமிய அழைப்பாளர்களை உருவாக்குதல் அவர்களை மேம்படுத்தல் மற்றும் அவர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சி நிரல்களையும் சவுதி அரேபியா செய்துவருகிது.
நிலை இவ்வாறு இருக்க இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமிய சின்னங்களையும் இஸ்லாமிய சமூகத்தையும் பாதுகாப்பதற்கு பிரயத்தனம் எடுக்கும் நாட்டினை துன்டாட இஸ்லாத்தின் எதிரிகள் தீட்டும் திட்டம் உலகம் முழுதும் வெளிச்சத்திற்கு வர வெகு தூரமில்லை. இப்போது சவுதி அரேபியாவை குறிவைத்து மதஸ்தலங்களையும் புனித இறையில்லமான மக்கா மற்றும் மதினாவில் அமைந்துள்ள ஹரமைன்களையும் தாக்குவதற்கு ஹூதிக்கள் எத்தனிப்பது எவ்வளவு பாரதூரமானது என்பது இஸ்லாமிய உலகம் மிக நிதானமாக உணர வேண்டும் .






