பலஸ்தீன சுதந்திர நாடு உருவாகுவதை தடுக்க வேண்டுமாயின் ஹமாஸ் தொடர்ந்தும் காஸாவில் பலமுள்ள ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் நெதன்யாஹுவின் எதிபார்ப்பாகவும் கொள்கையாகவும் இருந்துள்ளது. வருடாந்தம் இஸ்ரேலின் அங்கீகாரத்துடன்தான் டிரில்லியன் கணக்கான நிதிகள் ஹமாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகில் பல தீவிரவாதக் குழுக்களின் நிதிகள் முடிக்கப்பட்டபோது ஹமாஸின் நிதியினை முடக்குவதை இஸ்ரேல் தடுத்துள்ளது.
எனவே, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை தொடர்ந்தும் விஸ்தரிக்கவும் பிரச்சினைகளுக்கான நியாயங்களை உருவாக்கவும் பலஸ்தீன அதிகார சபைக்கு ஆயுதங்களை வழங்குவது ஆபத்தானது என்பதை உலக மக்களுக்கு நம்பச் செய்ய நெதன்யாஹுவுக்கு ஹமாஸ் தேவைப்பட்டது. அதனால் அடிக்கடி பல சிறிய பிரச்சினைகளை உருவாக்கி அதை பெரிதாக முடித்துவைக்கும் வாய்ப்பு இஸ்ரேலுக்கு கிடைத்து வருகின்றது.








