நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உயர்மட்ட ஒரு வார கூட்டத்தில் இந்த ஆண்டு அமைதி மற்றும் நீதியின் செய்தியை கொண்டு ஸவுதி பங்கேற்கிறது என்று வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.
சவூதி பிரஸ் ஏஜென்சிக்கு அளித்த அறிக்கையில் மேன்மைமிகு இளவரசர் இவ்வாறு கூறினார்ஃ “இராச்சியம், நிறுவனர் சகாப்தத்திலிருந்து அதன் வரலாறு முழுவதும்-அல்லாஹ் அவர் மீது கருணை காட்டட்டும்- மற்றும் சவூதி அரேபியா இராஜ்ஜியத்தின் மன்னர்களின் வரலாறு முழுவதும், தற்போது வரை, இரண்டு புனித மசூதிகளின் சேவகரான மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத், மற்றும் அவரது பட்டத்து மேன்மைதகு இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத், -அல்லாஹ் அவர்களைப் பாதுகாக்கட்டும்- அமைதியின் அடித்தளங்களை நிறுவுவதிலும், அனைத்து முனைகளிலும் உரையாடல் மற்றும் அமைதியான தீர்வுகளின் கொள்கையை செயல்படுத்துவதிலும் முன்னோடியாக இருந்து வருகிறார்கள்”.
ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதன் 80 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேன்மைமிகு வெளியுறவு அமைச்சர் மேலும் கூறினார்ஃ “மத்திய கிழக்கிலும் உலகிலும் நியாயமான அமைதியை ஏற்படுத்த இராச்சியம் எப்போதும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது, தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபக நாடுகளில் ஒன்றான இந்த இராச்சியம் அதன் முதல் மாநாட்டில் பங்கேற்றது. சர்வதேச சமூகத்தில் நம்பகமான சர்வதேச மத்தியஸ்தராக மாறியுள்ள அனைத்து தரப்பினருடனான அதன் நல்ல கொள்கைகள் மற்றும் சீரான உறவுகளுக்கு நன்றி, அதன் மத்தியஸ்த முயற்சிகள் மூலம் மோதல் தீர்வு மற்றும் அமைதியைக் கட்டியெழுப்புவதில் ஒரு புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட முக்கிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும். சர்வதேச சட்டத்திற்கான மரியாதையை வலுப்படுத்துவதன் மூலமும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பதன் மூலமும், சர்வதேச ஒத்துழைப்பை ஆதரிப்பதன் மூலமும் ஐக்கிய நாடுகள் சாசனத்தை உறுதியான யதார்த்தமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்ய இராச்சியம் ஆர்வமாக உள்ளது “.
பாலஸ்தீனிய மக்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், நடந்து வரும் வன்முறைச் சுழற்சியை நிறுத்துவதற்கும் இராஜ்ஜியத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை அவர் சுட்டிக்காட்டினார், அனைத்து சர்வதேச மன்றங்களிலும் இராஜ்ஜியத்தின் முன்னுரிமைப்படுத்திய விடயங்களில் பலஸ்தீன விவகாரம் முதலிடத்தில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தினார், மேலும் ஒரு சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுவதன் மூலம் தொடங்கி ஒரு விரிவான மற்றும் நிலையான பிராந்திய அமைதியை நிறுவுவதற்கு வழிவகுக்கும் ஒரு நியாயமான தீர்வை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் அது மேற்கொள்ளும். என்பதையும் உறுதிப்படுத்தினார்.








