
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு சௌதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக சௌதி அரேபியா நிற்பதாகவும், பாகிஸ்தானுக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் வெளியுறவு அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சௌதி அரேபியா இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.






