ஸவுதி மிகச் சிறந்த தலைவர்கள் அரசியல் ரீதியாகவும் மார்க்க ரீதியாகவும் கொண்டுள்ள மண் அதன் ஆட்சியாலர்கள் மிகச்சிறந்த மனித நேயம் மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தார்கள் அதில் முக்கிய ஆட்சியாலர்களில் ஒருவர்தான் மன்னர் பஹ்த் பின் அப்தில் அஸீஸ் ஆலு ஸுஊத் (ரஹ்) அவர்கள்.
ஸவுதியின் மிகப் பெரும் முன்னேற்றங்களுக்கு அடிப்படைகளை வகுத்தவர் என்று போற்றப்படுகின்றார். ஸவுதியின் கல்வி மறுமலர்ச்சியின் தந்தை என்று போற்றப்படும் மன்னர், சர்வதேச அல்குர்ஆன் அச்சகத்தை நிறுவினார், பலவேறு கல்வி நிறுவனங்களையும் மத நிறுவனங்களையும் நிறுவுவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
அதே போன்று அடுத்தவர்களுக்கு கொடை வழங்குவதில் அவருக்கு நிகர் அவர்தான் என்று சொல்லும் அளவுக்கு முன்னுதாரணமானார். தனது நண்பர்களிடம் பெருந் தொகைகளைக் கொடுத்து எனது பெயர் சொல்லாமல் தேவையானவர்களுக்கு கொடுக்குமாறு சொல்வார். அதவர் தொடர்பான சில விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது இக்கானொளி..








