சவுதி அரேபியாவின் ₹580 கோடி மானியத்தில் மன்னர் சல்மான் பெயரில் பிரம்மாண்ட மருத்துவமனை மொரிதானியாவில் உருவாக்கப்படுகின்றது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மொரித்தானியாவின் சுகாதாரத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில், தலைநகர் நவாக்சாட்டில் பிரம்மாண்டமான ‘மன்னர் சல்மான் மருத்துவமனை’ அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. சவுதி அரேபியாவின் 70 மில்லியன் டொலர் (சுமார் ₹580 கோடி) மானிய உதவியுடன் அமையவுள்ள இத்திட்டத்திற்கு, மொரிதானியாவின் அதிபர் மேதகு முகம்மது ஓல்ட் சேக் அல்-கஸ்வானி முன்னிலையில், சவுதி வளர்ச்சி நிதியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் பின் அப்துல் ரஹ்மான் அல்-மர்ஷத் அடிக்கல் நாட்டினார்.
சவுதி அரேபிய அரசு, தனது வளர்ச்சி நிதியத்தின் மூலமாக இந்த 70 மில்லியன் டொலர் நிதியை முழுமையான மானியமாக வழங்கியுள்ளது. இந்த முயற்சி, மொரித்தானியாவின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, அந்நாட்டு மக்களின் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான நட்புறவிற்கும், நிலையான வளர்ச்சிக்கான சவுதி அரேபியாவின் தொடர் ஆதரவிற்கும் இது ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.











