சகோதர நாடுகளுக்கு உதவிகளை நீட்டுவதற்கான சவுதி அரேபியாவின் கொள்கையின் தொடர்ச்சியாக, மற்றும் தலைமையின் வழிகாட்டுதலின்படி, யேமனில் உள்ள சகோதரர்களுக்கு சவுதி அபிவிருத்தி மற்றும் புனரமைப்புத் திட்டத்தின் (Saudi Program for Development and Reconstruction for Yemen) மூலம் 1.3 பில்லியன் சவுதி ரியால் கூடுதல் அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஆதரவை இராச்சியம் வழங்கியுள்ளது என்று தகவல் தொடர்பு அமைச்சர் சல்மான் அல்-தோஸரி தெரிவித்தார்.
அரசாங்கப் பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய அல்-தோஸரி மேலும் கூறியதாவது:
- சவுதி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியானது (Saudi Export and Import Bank) தொடங்கப்பட்டதிலிருந்து இந்த ஆண்டின் நடுப்பகுதி வரை வழங்கிய மொத்த கடன் வசதிகள் 89 பில்லியன் ரியாலுக்கு அதிகமாகும்.
- சவுதி தொழில்துறை மேம்பாட்டு நிதியத்தால் (Saudi Industrial Development Fund) அங்கீகரிக்கப்பட்ட கடன்களின் மதிப்பு, திட்டத்தின் ஆரம்பம் முதல் தற்போது வரை 88 பில்லியன் ரியாலைத் தாண்டியுள்ளது.








