
ஒரு நாட்டின் அல்லது ஒரு தலைவரின் நோக்கங்களை நிறைவேற்ற உதவும் சமயோசிதமான, புத்திசாலித்தனமான, மற்றும் சில சமயம் தந்திரமான செயல்கள் அல்லது திட்டங்களையே இராஜ தந்திரம் என்று அழைக்கப்படுகின்றது.
ஸவுதி அரேபியா 200வருடங்ககளாக தனக்கு எதிராக சொல்லப்படும் விடயங்களையும் எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் மிகவும் புத்திசாலித்தனமாக எதிர்க்கொண்டு வருகின்றமை ஸவுதியின் மிகவும் மேம்பட்ட இராஜ தந்திரத்திற்கு கட்டியம் கூறும் ஒன்றாகும்.
ஓக்டோபர் தாக்குதலின் பின்பு ஏற்பட்ட பிரச்சினையை மிகவும் புத்திசாலித்தனமாக முஸ்லிம் நாடுகளின் அல்லது அண்டை நாடுகளின் பலம், பலவீனம், வாய்ப்புக்கள், தடைகள் அதே நேரம் ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு உள்ள பலம், பலவீனம், வாய்ப்புகள், தடைகள் என்பவற்றை மிகவும் துள்ளியமாக ஆய்வு செய்து சமூக வலைத்தளங்களின் விமர்சனங்களை கணக்கிலெடுக்காது இராஜ தந்திர அனுகுமுறைகளினூடாகவே இதற்கான தீர்வினை அடைய முடியும் என்பதை உறுதியாக நம்பியதுடன் அதற்காக முழு வீச்சாக செயற்பட்டது.
அந்த மேம்பட்ட புத்திசாலித்தனமான நகர்வுகளின் காரணமாக இஸ்ரேலுக்கு தனது தாக்குதலுக்கு காரணம் சொல்லி நியாயப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதுடன், அடுத்தவர்களைத் தாக்கச் செய்து தனது கொலைகாரச் செயல்களுக்கு உலகத்தின் பார்வையில் தன்னை நியாயப்படுத்த ஒரு துரும்பை இஸ்ரேல் தேடினாலும் அதற்கு இடம் கொடுக்காத விதத்தில் அடுத்தவர்களுடன் பேசி அவர்களையும் கட்டுப்படுத்தியதன் விளைவாக இன்று இஸ்ரேல் தனிமைப்பட்டு நிர்க்கிறது. உலகளவில் அரசியல் ரீதியில் பலத்த எதிர்ப்புக்களை சந்தித்துள்ள இஸ்ரேல் அமெரிக்கா தவிர ஏனைய வல்லரசுகள் அனைத்தையும் தனக்கு எதிராக ஒன்று சேர வைத்துள்ளது.
கிட்டத்தட்ட ஐ.நா.சபையில் 80வீதமான நாடுகள் பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ள நிலையில் இந்த நெருக்கடியிலிருந்து வெளியில் வர 09.22க்கு முன்னர் ஏதாவதொரு பிரச்சினையை ஆரம்பிக்க இஸ்ரேல் விரும்புகின்றது. ஐ.நா. சபையில் 09.22அன்று அரச தலைவர்களுக்கிடையில் பலஸ்தீனை தனிநாடாக ஏற்று உறவுகளை வலுப்படுத்த எடுக்கப்படும் நகர்வு மாற்றத்திற்கான மிகப் பெரும் புள்ளியாகும். நிச்சம் இது ஸவுதின் தலைமைகள் போற்றப்பட வேண்டிய தருணம் மற்றும் அதன் இராஜ தந்திர நகர்வுகள் பற்றி இளயவர்களுக்கு படிப்பிக்க வேண்டிய சந்தர்ப்பமாகும்.








