மதீனா: புனித மஸ்ஜிதுன் நபவி வளாகத்தில் அமைந்துள்ள திருக்குர்ஆன் வகுப்புகளில், 2025-ஆம் ஆண்டில் மட்டும் 8000-க்கும் மேற்பட்ட அனாதை மாணவ, மாணவியர் புனித குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ளனர்.
இந்த மகத்தான சாதனை, இறைவேதத்தின் மீது சவூதி அரேபியா கொண்டுள்ள அளப்பரிய அக்கறையை பறைசாற்றுகிறது. குர்ஆனைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அதைப் பயிலும் மாணவர்களை அரவணைத்து ஆதரிப்பதிலும் சவூதி அரசு முன்னின்று செயல்படுகிறது.
குர்ஆனை வெறும் கல்வியாக மட்டுமன்றி, வாழ்வியல் நெறியாகவும் மாணவர்களின் மனதில் பதியவைக்கும் இந்த முயற்சிக்கு சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.






