சவுதி அரேபியாவின் ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief) ஏமனின் ஏடன், லாஹிஜ் மற்றும் தாயிஸ் ஆகிய மாகாணங்களில் உள்ள 12 பள்ளிகளைப் புனரமைத்து விரிவுபடுத்தியுள்ளது. சர்வதேசக் குடிபெயர்வு அமைப்புடன் (IOM) இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், இந்தப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுகாதார வசதிகள், சூரிய சக்தி அமைப்புகள் மற்றும் தேவையான கல்வி உபகரணங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதுகாப்பான கல்விச் சூழல் உறுதி செய்யப்பட்டு, போர் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட சுமார் 18,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாகப் பயனடையவுள்ளனர்.






