காசா பகுதிக்குள் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்கு விநியோகிக்கும் முன்னேற்பாடாக, உணவுப் பொதிகள் மற்றும் குழந்தைகளுக்கான பால் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு, மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தால் அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிக் குழு ஒன்று, 2025.09.08 (ஞாயிற்றுக்கிழமை) ரஃபா தரைவழிச் சோதனைச் சாவடியின் சுற்றுப்புறத்திலிருந்து கெரெம் ஷாலோம் சோதனைச் சாவடியை நோக்கிக் கடந்து சென்றது.
காசா பகுதி எதிர்கொண்டுள்ள கடினமான வாழ்க்கைச் சூழ்நிலைகளின் மத்தியில், சகோதர பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவளிக்கவும், அவர்களின் துன்பங்களைத் தணிப்பதற்காகவும் இந்த மையம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு நீட்சியாக இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.








