
உலகப் பொருளாதாரம் சக்தி வலுவுட்டல் என்பவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களாக காணப்படும் மத்திய கிழக்கின் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான நடைமுறைகள் உருவாக்கப்படும் என மத்திய கிழக்கு ஒத்துழைப்பு மையத்தின் செயலாளர் ஜாஸிம் அல் பதைவி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஒற்றை கடவுச் சீட்டு, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பற்றிய நடவடிக்கைகள், பண மோசடி மற்றும் போதை வஸ்துக்கு எதிரான போராட்டம் என்பவற்றில் கட்டாயம் ஒருமைப்படுத்தப்பட்ட தண்மை உருவாக்கப்படும் என்று கூறினார்.