
இஸ்லாத்தின் பிரதான மூலாதாரமான அல்-குர்ஆனைப் பாடமிடுதல் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் வருடாந்தம் ஸவுதி அரேபியாவினால் நடாத்தப்படும் மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் போட்டி 45ஆவது தடவையாக மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் கஃபாவிற்கு அருகாமையில் மிக விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. உலகில் 128 நாடுகளிலிருந்து கலந்துகொண்ட போட்டியாளர்கள் அல்குர்ஆன் மனனம், கிராத், தப்ஸீர் போன்ற போட்டிகளில் கலந்துகொண்டனர். கலந்துகொண்ட எல்லோருக்குமான அனைத்துச் செலவுகளையும் பொறுப்பேற்ற ஸவுதி அரசாங்கம் அனைவருக்கும் ஞாபகார்த்த பரிசில்களை வழங்கியதோடு வெற்றி பெற்றவர்களுக்கு பெருந்தொகை பணப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டது…
பரிசளிப்பு விழாவில் போட்டியின் மேற்பார்வையாளர் ஸவுதியின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சர் கலாநிதி அப்துல்லதீப் ஆலுஷ் ஷேய்க் அவர்களும் மக்காவின் கவர்னர் உட்பட பல முக்கியஸ்தர்களும் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்…
பரிசளிப்பு விழாவின் நேரடி ஒளிபரப்பு மற்றும் போட்டி தொடர்பான சுருக்க தகவல்களை தெரிந்துகொள்ள …..