சவூதி அரேபியா, லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு (Beirut) தனது மனிதாபிமான உதவிக் கரத்தை நீட்டியுள்ளது.
ராஜ்ஜியத்தின் நிரந்தர மனிதாபிமானப் பணியைப் பறைசாற்றும் வகையில், அங்குள்ள மிகவும் தேவையுடைய குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொதிகள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
சகோதர லெபனான் மக்களின் துன்பங்களைக் குறைக்கும் நோக்கில், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் (KSRelief) மூலம் இந்த தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படுகிறது.






