சவூதி அரேபியாவின் மனிதாபிமான உதவிகள் மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவை (Burkina Faso) சென்றடைந்துள்ளன.
மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் (KSRelief) மூலம் அனுப்பப்பட்டுள்ள இந்த உதவிகள், அந்நாட்டில் உள்ள மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் தேவையுடைய மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.
சவூதி அரேபியாவின் இந்த உதவியானது, ஆபிரிக்காவின் சஹேல் பிராந்தியம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள நட்பு நாடுகளின் துன்பங்களைக் குறைக்கும் தொடர்ச்சியான மனிதாபிமான முயற்சிகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது






