புனித ஹரம் மற்றும் மஸ்ஜித் நுபவி பள்ளிவாசல்களில் 2026-ஆம் ஆண்டுக்கான இஃதிகாஃப் முன்பதிவு ஆரம்பம்!

கலாநிதி: அப்துல் சத்தார் (மதனி)

​சவூதி அரேபியா: புனித மிகு ரமழான் மாதத்தை முன்னிட்டு, மக்கா அல்-ஹரம் மற்றும் மதினா அல்-நுபவி ஆகிய இரு பெரும் புனித பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருப்பதற்கான உத்தியோகபூர்வ முன்பதிவுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகப் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் ஆர்வலர்கள் இதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.

​முக்கிய திகதிகள் மற்றும் காலக்கெடு

​முன்பதிவு ஆரம்பம்:

மார்ச் 5, 2026 (வியாழக்கிழமை) – சவூதி நேரப்படி காலை 11:00 மணி.

​முன்பதிவு முடிவு: அனுமதிக்கப்பட்ட இடங்கள் நிரம்பியவுடன் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வது நிறுத்தப்படும்.​இஃதிகாஃப் காலம்: ரமழான் 20-ஆம் இரவில் தொடங்கி ஈதுல் பித்ர் (பெருநாள்) இரவு வரை.

​விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:

​இஃதிகாஃப் சேவையைப் பெற விரும்புவோர் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்:

​விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

​செல்லுபடியாகும் இகாமாவோ (வசிப்பிட அனுமதி), அல்லது தரிசிப்பு (Visit) விசா, அல்லது உம்ரா விசா வைத்திருக்க வேண்டும்.

​சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

​சரிபார்ப்புக் குறியீட்டை (OTP) பெறுவதற்குச் சவூதி அரேபிய தொலைபேசி எண் அவசியமாகும்.

​விண்ணப்பிக்கும் நடைமுறை

​விண்ணப்பதாரர்கள் பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றித் தங்களை முழுமையாகப் பதிவு செய்து கொள்ளலாம்:

​அதிகாரப்பூர்வ இணையதளம்: முதலாவதாக https://alharamain.gov.sa என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

​சேவையைத் தொடங்குதல்: இணையதளத்தில் உள்ள “Start Service” (சேவையைத் தொடங்கு) என்பதை அழுத்தவும்.

​உள்நுழைதல்: ‘நபார்’ (Nafath) முறைமை மூலமாக உள்நுழையவும் அல்லது புதிய கணக்கை உருவாக்கவும்.

​இடத்தைத் தேர்வு செய்தல்:

மக்கா அல்-ஹரம் அல்லது மதினா அல்-நுபவி பள்ளிவாசல்களில் உங்களுக்கு விருப்பமான இடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

​தகவல்களைப் பதிவிடுதல்: கோரப்பட்டுள்ள அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் துல்லியமாக நிரப்பவும்.

​ஒப்புதல்: நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை முறையாக வாசித்துப் பார்த்து அவற்றை ஏற்றுக் கொள்ளவும்.

​விழிப்புணர்வு வீடியோ:

இஃதிகாஃப் தொடர்பான கட்டாய விழிப்புணர்வு வீடியோவைப் பார்க்கவும்.

​விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல்:

இறுதியாக உங்கள் விண்ணப்பத்தை உறுதிப்படுத்திச் சமர்ப்பிக்கவும்.

​முக்கிய குறிப்பு

​பதிவுகள் அனைத்தும் மின்-முறைமை (Electronic) வழியாக மட்டுமே நடைபெறும். இடங்கள் மிக விரைவாக நிரம்பிவிடும் என்பதால், முன்கூட்டியே பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

​புனிதமான இந்த இறை இல்லங்களில் இஃதிகாஃப் இருக்கும் பாக்கியத்தை நமக்கும் உங்களுக்கும் அல்லாஹ் வழங்கி, நம்முடைய அமல்களை அங்கீகரிப்பானாக.

  • Related Posts

    காசா மக்களுக்குத் தொடரும் மனிதாபிமான உதவிகள்: மன்னர் சல்மான் மையத்தின் சார்பில் புதிய உணவுப் பொதிகள் மற்றும் உணவுகள் விநியோகம்!

    பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நிலவும் இக்கட்டான சூழலில், அங்கிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து உதவும் வகையில், சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) தனது நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமான முன்னெடுப்பு குறித்த…

    Read more

    ஈரானின் தொடர் தாக்குதல்கள்: குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு சவுதி அரேபியா முழு ஆதரவு!

    குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் மீது ஈரான் நடத்தி வரும் நியாயமற்ற தாக்குதல்களை சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த முக்கிய அறிவிப்பின் விவரங்கள்: பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டுமானால், ஈரான் தனது ஆக்கிரமிப்புப்…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    காசா மக்களுக்குத் தொடரும் மனிதாபிமான உதவிகள்: மன்னர் சல்மான் மையத்தின் சார்பில் புதிய உணவுப் பொதிகள் மற்றும் உணவுகள் விநியோகம்!

    • By Admin
    • July 18, 2026
    • 12 views
    காசா மக்களுக்குத் தொடரும் மனிதாபிமான உதவிகள்: மன்னர் சல்மான் மையத்தின் சார்பில் புதிய உணவுப் பொதிகள் மற்றும் உணவுகள் விநியோகம்!

    ஈரானின் தொடர் தாக்குதல்கள்: குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு சவுதி அரேபியா முழு ஆதரவு!

    • By Admin
    • July 18, 2026
    • 14 views
    ஈரானின் தொடர் தாக்குதல்கள்: குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு சவுதி அரேபியா முழு ஆதரவு!

    சவுதி அரேபியாவின் மருந்துத் தயாரிப்புத் துறை: தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய வியத்தகு வளர்ச்சி!

    • By Admin
    • July 18, 2026
    • 10 views
    சவுதி அரேபியாவின் மருந்துத் தயாரிப்புத் துறை: தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய வியத்தகு வளர்ச்சி!

    கென்யாவில் சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் 7-வது அறிவியல் மாநாடு: வஜீர் மாகாணத்தில் முதன்முறையாகச் சிறப்புத் திட்டம்!

    • By Admin
    • July 13, 2026
    • 25 views
    கென்யாவில் சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் 7-வது அறிவியல் மாநாடு: வஜீர் மாகாணத்தில் முதன்முறையாகச் சிறப்புத் திட்டம்!

    ஈரானின் தொடர் அத்துமீறல்கள்: சவுதி அரேபியா வன்மையாகக் கண்டனம்!

    • By Admin
    • July 12, 2026
    • 16 views
    ஈரானின் தொடர் அத்துமீறல்கள்: சவுதி அரேபியா வன்மையாகக் கண்டனம்!

    சவுதி அரேபியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு: தூசிப் மாசுபாட்டைத் தடுக்கும் திட்டங்களுக்கு 16 மில்லியன் ரியால் அபராதம்!

    • By Admin
    • July 12, 2026
    • 23 views
    சவுதி அரேபியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு: தூசிப் மாசுபாட்டைத் தடுக்கும் திட்டங்களுக்கு 16 மில்லியன் ரியால் அபராதம்!