புதிய மத்திய கிழக்கை உருவாக்குவோம் என்ற கோசத்துடன் அதற்கான வரைபடத்துடன் அலைந்தார் நெதன்யாஹு காஸாவை கட்டுப்படுத்தி முழு பலஸ்தீனையும் சொந்தமாக்குவோம் இங்கு பலஸ்தீன் என்ற ஒரு நாடே இல்லை முழு நாடும் இஸ்ரேலுக்கே சொந்தம் என்று ஆணவத்துடன் ஆட்டம் போட்டான். மத்திய கிழக்கின் அணுவாயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு என்று வாய் கிழியக் கத்தினான்.
ஆனால், உறங்குவது போன்று காட்சியளித்த ஸவுதியின் சாத்வீகப் போர் இவ்வளவு கூர்மையடையும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. தனக்கு மிகவும் ஒத்துழைப்பாக பக்கவாத்தியம் பாடிய அமெரிக்கா காலை வாரும் என்று அவன் நினைக்கவில்லை.
ஸவுதியின் இராஜ தந்திரம் கிட்டத்தட்ட அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் குழப்ப நிலையை உருவாக்கியுள்ளன என்றே கூற வேண்டும்.
நெதன் யாஹுவின் அண்மைய அறிக்கைகளில் இரண்டு இதை உறுதிப்படுத்துகின்றது.
01. அமெரிக்கா பலஸ்தீனத்தை அங்கீகரிக்கக் கூடாது.
02. அமெரிக்கா பலஸ்தீனத்தை அங்கீகரித்தால் நாங்கள் அமெரிக்காவுக்கு எதிராக செயற்படுவோம்.
டொனால்ட் ரம்பின் கருத்துக்களை மதிக்காது இஸ்ரேல் மதம் பிடித்து திரிந்தது என்பது பலரும் சொன்ன கருத்துக்கள்தான் இப்போது அது முற்றியுள்ளது என்றே தோன்றுகின்றது.








