மத்திய கிழக்கில் தற்போது நிலைகொண்டுள்ள பிரச்சினையின் வெளித்தோற்றம் ஒரு கருத்தைச் சொன்னாலும் அதன் இலக்குகளும் பாதிப்புக்களும் மிகவும் ஆபத்தானவை. ஈரான் இஸ்ரேல் அமெரிக்காவிற்கிடையிலான போரில் எந்தப் பக்கமும் உறுதியாக நிர்க்க முடியாத அளவு நிலமைகள் மாறியுள்ளன. இதில் ஸவுதியின் முன்னால் உளவுப் பிரிவுத் தலைவர் இளவரசர் துர்கி சொல்வதைப் போல மூன்று பிரதாண பிரச்சினைகள் உள்ளன..
01. அகன்ற இஸ்ரேல் கனவு
02. அகன்ற பாரசீகக் கனவு
03. தங்கள் மஹ்தி வரவேண்டும் என்றால் இஸ்ரேல் என்கிற நாடு இருக்கு வேண்டும் என்று மத ரீதியாக நம்பும் கிறிஸ்தவ ஸியோனிஸ்டுகள்..
இதில் இஸ்ரேல் போரின் முடிவில் மத்திய கிழக்கின் வரைபடத்தை மாற்றுவோம் என்று காஸா பிரச்சினை ஆரம்பித்த காலத்திலிருந்து சொல்லிவருகின்றது. ஈரான் ஏற்கனவே ஐந்து ஸுன்னி முஸ்லிம் நாடுகளின் தலை நகரங்களை தன் கட்டுக்குள் வைத்திருந்தது அதை இந்தப் போராட்டம் ஆட்டம் காணவைத்துள்ளன.
கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையனவர்கள் போராட்டத்தை விரும்புபவர்கள் அல்ல என்றாலும் அவர்களுக்குள் அதிகார வர்க்கமாக இருக்கும் அல்லது அதில் மிகுந்த தாக்கத்தைச் செலுத்தும் ஸியோனிஸ்டுகளுக்கு முன்னால் அவர்களால் எதுவும் செய்ய முடியாது..
எனவே, இந்தப் போர் மூவருகும் ஏதோ ஒரு அடிப்படையில் முக்கியமான போர்தான் வெளியில் இருந்துபார்த்தால் அரபு நாடுகளை யார் கட்டுப்படுத்துவது யார் துண்டு போடுவது என்பதில்தான் பிர்சிசனை இதை தெளிவாக ஈரானின் ஜனாதிபதி அறிவித்திருந்தார் மத்திய கிழக்கில் யார் முதலிடம் பெறுவது என்பதுதான் எங்களுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலுள்ள பிரச்சினை வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால் இவை அனைத்தையும் அமைதியாக நிதானமாக சிந்தித்ததன் விளைவாக ஆரம்பத்திலேயே அறிந்துகொண்டார்கள் அரபுத் தலைவர்கள் அதனால் தங்களுக்குள் ஆயிரம் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் மத்திய கிழக்கு நாடுகள் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அப்போதுதான் சவால்களை முறியடிக்கலாம் என்று தங்களை ஒற்றுமைப்படுத்திக் கொண்டார்கள். இது அவர்களின் ஆழ்ந்த புரிதல் மற்றும் நிலையான தலைமைத்துவத்தின் வெளிப்பாடு.





