மறைந்த மன்னர் அப்துல்லாஹ் பாகிஸ்தானால் என்றும் போற்றப்பட வேண்டிய ஒருவர். பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்திக்கு மிகப்பெரும் உதவிகளைச் செய்தார். பாகிஸ்தான் மேற்குலகின் ஆபத்துக்களில் சிக்கியபோது பாகிஸ்தானின் செலவீனங்களைப் பொறுப்பேற்றார், ஆபத்துக்களிலிருந்து அதைப் பாதுகாத்தார். தேவையான எரிபொருளை இலவசமாகவே வழங்கினார்.
அவர் பாகிஸ்தானின் பாராயுளுமன்றத்தில் பேசும்போது… பாகிஸ்தான் ஜிந்தா பாத் என்றார் அதாவது பாகிஸ்தான் வாழ்க என்பது அதன் பொருள்
பாகிஸ்தானுக்கும் ஸவுதி அரேபியாவுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஒப்பந்தம் நடைபெற்றுள்ள இக்காலத்தில் பாகிஸ்தானியர்கள் அந்த வீடியோவை இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
ஸவுதி சொல்லாது சொன்னால் செய்யும் செய்வதையே சொல்லும்..








