
அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மன்னர் ஸல்மான் நிவாரண மையம் தொடர்ச்சியாக உதவி வருகின்றது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு, சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் மன்னரின் நிவாரண மற்றும் மனிதாபிமான மையம் (King Salman Humanitarian Aid and Relief Centre) அவசர உதவிப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த உதவியானது, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெரும் நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள சவூதி தூதர் நவாஃப் அல்-மால்கி, தற்போதைய கடினமான சூழ்நிலையில் இஸ்லாமாபாத்திற்கு சவூதியின் ஆதரவு தொடரும் என்பதை உறுதிப்படுத்தினார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவை எடுத்துக்காட்டுவதோடு பாகிஸ்தானின் துன்ப துயரங்களில் தொடர்ந்தும் ஸவுதி பங்கெடுப்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
காணொளியினை பார்வையிட..