புனித குர்ஆனுக்கான மன்னர் சல்மான் உள்ளூர் போட்டியின் பரிசுத் தொகையை 9 மில்லியன் ரியால்களாக உயர்த்துவதாக இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு ஷேக் டாக்டர் அப்துல் லத்தீப் பின் அப்துல் அஜீஸ் ஆல் ஷேக் அறிவித்துள்ளார்.
இம்மாற்றமானது போட்டியின் 28-வது தொடரிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்படி, போட்டியின் ஆறு பிரிவுகளிலும் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்களை ஊக்குவிக்கவும், போட்டியின் வீச்சை விரிவுபடுத்தவும், இறைவேதத்திற்குச் சேவை செய்யும் தேசிய அளவிலான இப்போட்டியின் மகத்துவத்தை சர்வதேச தரத்தில் நிலைநாட்டவும் இந்த உன்னத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






