மிகவும் தனித்துவமான அடிப்படையில் பலஸ்தீனப் பிரச்சினையை கையாண்டுள்ளது ஸவுதி அரபியா தனது தகைமைகளை சரியாக எடைபோட்டு இதை ஆயுத போராட்டமாக முன்னெடுக்காது இராஜ தந்திர ரீதியில் முன்னெடுத்த நகர்வுகள் இஸ்ரேலுக்கு மிகவும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது சில ஆபிரிக்க நாடுகள் ஒதுக்கப்பட்டதைப் போன்று இஸ்ரேலும் ஒதுக்கப்படுமா என்பது பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதுவரை 150 நாடுகள் பலஸ்தீன் எனும் தனி நாட்டை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ளன உலகின் அனைத்து நாடுகளும் பலஸ்தீனை அங்கீகரிக்கும் நிலை தோன்ற வேண்டும் என்று ஸவுதி அரேபியா வலியுறுத்தி வருகின்றது. பலஸ்தீனை 1967ஆம் ஆண்டின் எல்லைகளின் அடிப்படையில் இரு நாடாக பிரிக்கும் மாநாடு ஐ.நாவில் ஆரம்பித்துள்ள நிலையில் இதற்கான ஆதரவுகள் அதிவரித்து வருவதை இஸ்ரேலுக்கு அரசியல் ரீதியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.








