“நமது பெருமை நம் இயல்பில்” என்ற கருப்பொருளுடன் சவுதி அரேபியா தேசிய தினத்தை நாளை அனுஷ்டிக்கின்றது.
ஸவுதி அரேபிய அரசு மற்றும் மக்கள் இணைந்து, நாளை (செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2025) 95-வது தேசிய தினத்தை அனுஷ்டிக்கத் தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டு, “நமது பெருமை நம் இயல்பில்” என்ற கருப்பொருளுடன் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது, நாட்டின் வரலாறு, சாதனைகள், எதிர்கால இலக்குகளை நினைவுகூறும் ஒரு முக்கியமான தருணமாகும். நாட்டின் தலைநகர் ரியாத் உட்பட அனைத்து நகரங்களிலும் சிறப்பு நிகழ்வுகளும், அலங்காரங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு, ஸவுதி அரேபியாவின் தேசபக்தி, ஒற்றுமை மற்றும் நாட்டின் வளர்ச்சி மீதான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
இலங்கையில் உள்ள சவுதி அரேபியக் குடிமக்களுக்கு அழைப்பு.
இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதரகம், அந்நாட்டின் 95-வது தேசிய தினத்தை முன்னிட்டு ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு, வரும் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2025 அன்று, கொழும்பில் உள்ள ITC ஹோட்டலில் நடைபெற உள்ளது.
இலங்கையில் வசிக்கும் அல்லது சுற்றுலா வந்திருக்கும் சவுதி அரேபியக் குடிமக்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். அன்றைய தினம் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இது தொடர்பான பல நிகழ்வுகளும் மக்களை அறிவுட்டும் செயலமர்வுகளும் ஸவுதியின் கல்விக் கூடங்கள் அனைத்திலும் 11 நாட்களுக்கு (நேற்றிலிருந்து) தொடராக நடைபெருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.








