சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டல் அமைச்சர் ஷெய்க் கலாநிதி அப்துல் லத்தீப் பின் அப்துல் அஸீஸ் அல் ஷெய்க் அவர்களின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ், தாய்லாந்தில் மாபெரும் குர்ஆன் மனனப் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
அந்நாட்டின் ஷெய்ஹுல் இஸ்லாம் அலுவலகம் மற்றும் பாங்கொக்கிலுள்ள இஸ்லாமிய கலாசார நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து, சவூதி இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு ஏற்பாடு செய்த இப்போட்டியில், நாடு முழுவதிலுமிருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கடந்த வியாழக்கிழமை (ஹிஜ்ரி 1447, ரபீஉல் அவ்வல் மாதம் 19ஆம் திகதி) மாலை நிறைவடைந்த இப்போட்டி, குர்ஆனின் புனிதத்தன்மையை நிலைநிறுத்துவதிலும், அதனை மனனம் செய்வதை ஊக்குவிப்பதிலும் பெரும் பங்காற்றியுள்ளது.








