
தனியார் துறையினரிடையேயான உறவை வலுப்படுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு.
சௌதி அரேபியா – இலங்கை வர்த்தக சபை ஒன்றை நிறுவுவது குறித்து, சௌதி வர்த்தக சம்மேளனத்துடன் (FSC) இலங்கையின் சௌதி அரேபிய தூதுவர் அமீர் அஜ்வத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான தனியார் துறையின் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சௌதி வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஹஸன் மோஜப் அல்-ஹுவைஸி, தூதுவர் அமீர் அஜ்வத்தை சந்தித்து, சௌதி – இலங்கை வர்த்தக சபைக்கான புதிதாகப் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். இந்த வர்த்தக சபை நிறுவப்பட்டதும், வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக, சௌதி வர்த்தக சம்மேளனத்திலிருந்து ஒரு வர்த்தகக் குழுவை இலங்கைக்கு அனுப்புவதாகவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.








