சூடானில் நிரந்தர அமைதிக்கான தீர்மானம்…


சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்கள் சூடான் மோதல் குறித்த தீவிர ஆலோசனைகளை நடத்தினர். அவர்கள், இந்த மோதல் உலகின் மிகக் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி விட்டதோடு, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தீவிரமான அச்சுறுத்தலைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

அமைச்சர்கள் ஒப்புக்கொண்ட சில முக்கியக் கொள்கைகள்:

முதலாவது: சூடானின் இறையாண்மை, ஒருமை, நிலப்பரப்பு பாதுகாப்பு ஆகியவை அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு அவசியமானவை.

இரண்டாவது: இந்த மோதலுக்கு இராணுவத் தீர்வு எதுவும் இல்லை; தற்போதைய நிலைமையைத் தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாத துன்பத்தையும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான ஆபத்தையும் ஏற்படுத்துகிறது.

மூன்றாவது: அனைத்து மோதல் தரப்பினரும், மனிதாபிமான உதவிகளை எந்தத் தடைகளுமின்றி விரைவாகவும் பாதுகாப்பாகவும் சூடானின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையச் செய்ய வேண்டும்; சிவில் குடிமக்களை சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின்படி காப்பாற்ற வேண்டும்; ஜெத்தா அறிவிப்பின் கீழ் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்; குடிமக்கள் கட்டமைப்புகளை குறிவைக்கும் சீரற்ற வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும்.

நான்காவது: சூடானின் எதிர்கால ஆட்சி சூடான் மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும். அது வெளிப்படையான, உள்ளடக்கிய இடைக்கால அரசியல் செயல்முறையால் அமைய வேண்டும், போராடும் எந்த தரப்பின் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டிருக்கக்கூடாது.
அமைச்சர்கள், மனிதாபிமான உதவிகள் விரைவாகவும் முழுமையாகவும் சென்றடைய, முதற்கட்டமாக மூன்று மாதங்களுக்கு ஒரு மனிதாபிமான இடைநிறுத்தத்தை (அமைதிச் சண்டை) கோரினர். இது, நிலையான ஆயுத நிறுத்தத்திற்கு வழிவகுக்க வேண்டும். பின்னர், ஒன்பது மாதங்களுக்குள் வெளிப்படையான, உள்ளடக்கிய இடைக்கால அரசியல் செயல்முறையைத் தொடங்கி நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும், சட்டபூர்வமான மற்றும் பொறுப்புடன் செயல்படும் குடிமைப் பிரதிநிதிகளின் தலைமையிலான சுயாட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். இது, நீண்ட காலத்திற்கு சூடானின் நிலைத்தன்மைக்கு, அரசின் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கும் அத்தியாவசியமாகும்.
சூடானின் எதிர்காலம், முஸ்லிம் சகோதரத்துவம் (الإخوان المسلمون) தொடர்புடைய அல்லது அதனுடன் இணைந்த வன்முறைக் குழுக்களால் நிர்ணயிக்கப்பட முடியாது. அந்த அமைப்பின் நிலைதடுமாறச் செய்யும் தாக்கம், முழு பிராந்தியத்திலும் வன்முறை மற்றும் நிலைமையற்ற தன்மையை தூண்டியுள்ளது.

அமைச்சர்கள், இக்கால அட்டவணைகளின் செயல்பாட்டை நெருக்கமாகக் கண்காணிக்க ஒப்புக்கொண்டனர்; தரப்புகள் முழுமையாக அமல்படுத்தும் வண்ணம் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தயாராக உள்ளதாகவும், அடுத்தடுத்த நடவடிக்கைகளைப் பேசுவதற்காக மீண்டும் சந்திப்பதற்கும் ஒப்புக்கொண்டனர்.

ஐந்தாவது: சூடானின் மோதல் தரப்புகளுக்கு வெளிநாட்டு இராணுவ ஆதரவு வழங்குவது, மோதலை மோசமாக்கி, நீடிக்கச் செய்து, பிராந்தியத்தில் நிலைமையற்ற தன்மையை அதிகரிக்கிறது. ஆகவே, வெளிநாட்டு இராணுவ ஆதரவை நிறுத்துவது மோதலை முடிவுக்குக் கொண்டுசெல்ல அவசியமாகும்.

அமைச்சர்கள் உறுதி செய்த முக்கியமான விடயங்களாவன..

சூடானிய ஆயுதப்படைகள் மற்றும் விரைவு ஆதரவு படைகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை மூலம் மோதலுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்க அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொள்வது.

அனைத்து மோதல் தரப்புகளுக்கும் அழுத்தம் கொடுத்து, பொதுமக்கள் மற்றும் குடிமக்கள் கட்டமைப்புகளை பாதுகாப்பது, உதவிகள் தேவைப்படுவோரிடம் சென்றடைவதை உறுதி செய்வது.

செங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் சூழலை உருவாக்குவது.

தீவிரவாத, பயங்கரவாத அமைப்புகள் பரவுவதற்கு வழிவகுக்கும் எல்லைத் தாண்டிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது.

சூடானில் மோதல் தொடர்வதால் லாபம் அடைய முயலும் பிராந்திய மற்றும் உள்ளூர் குழுக்களுக்கு வாய்ப்பு அளிக்காதிருத்தல்.

அமைச்சர்கள், சூடானிய மக்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் அமைதியை மீட்டெடுக்கவும் தங்கள் உறுதியை வலியுறுத்தினர். மேலும், ஆப்பிரிக்க, அரபு நாடுகள், ஐ.நா., மற்றும் சர்வதேசக் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

அவர்கள், அவசரமான மனிதாபிமான தேவைகள் மற்றும் ஆரம்பகால மீட்பு தேவைகளைப் பற்றியும் விவாதித்து, சர்வதேச சமூகம் இவ்விஷயங்களைச் சமாளிக்க தொடர்ந்து ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அமைச்சர்கள், சூடானில் மோதலை முடிவுக்குக் கொண்டுவரவும் வெளிப்படையான, உள்ளடக்கிய இடைக்காலத்தை ஆதரிக்கவும் தங்களது ஒருங்கிணைந்த முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக அமைச்சர்தரத்திலும் அதற்கு கீழான நிலைகளிலும் விவாதங்கள், ஆலோசனைகள், சந்திப்புகளைத் தொடர்ந்து நடத்தத் தீர்மானித்தனர்.

இதை அடைவதற்காக,

அவர்கள், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா இணைந்து ஜெத்தா செயல்முறை மூலம் சூடானில் நிலையான ஆயுத நிறுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கும், 2024 ஜூலை மாதத்தில் கெய்ரோவில் நடைபெற்ற சூடானிய குடிமை மற்றும் அரசியல் சக்திகளின் மாநாட்டில் எகிப்து மேற்கொண்ட முயற்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்தனர்.
அவர்கள், இவ்விஷயத்தைத் தொடர்ந்து விவாதிக்க 2025 செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் நால்வரிசை அமைச்சர்ச் சந்திப்பில் மீண்டும் கூட ஒப்புக்கொண்டனர்.

https://www.spa.gov.sa/N2396304

  • Related Posts

    சமாய் 2′ திட்டம் மற்றும் 40 புதிய படிப்புகள் அறிமுகம்! – SDAIA அறிவிப்பு

    சவூதி அரேபியாவின் தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம் (SDAIA) ஏற்பாடு செய்துள்ள, ‘தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டிற்கான சர்வதேச மாநாடு’ (ICAN 2026) இன்று (புதன்கிழமை) தொடங்கியது. SDAIA-வின் அதிகாரப்பூர்வச் செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-ஷெஹ்ரி (Majid…

    Read more

    ஏமனில் ஒரே வாரத்தில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம்: சவூதி அரேபியாவின் மனிதாபிமானப் பணிகள் தீவிரம்!

    ஏமன் மக்களுக்கான சவூதி அரேபியாவின் உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief), கடந்த ஜனவரி 7 முதல் 13, 2026 வரையிலான ஒரு வார காலத்தில் அல்-ஹுதைதா மற்றும் ஹஜ்ஜா மாகாணங்களில்…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    சமாய் 2′ திட்டம் மற்றும் 40 புதிய படிப்புகள் அறிமுகம்! – SDAIA அறிவிப்பு

    • By Admin
    • January 28, 2026
    • 5 views
    சமாய் 2′ திட்டம் மற்றும் 40 புதிய படிப்புகள் அறிமுகம்! – SDAIA அறிவிப்பு

    ஏமனில் ஒரே வாரத்தில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம்: சவூதி அரேபியாவின் மனிதாபிமானப் பணிகள் தீவிரம்!

    • By Admin
    • January 27, 2026
    • 15 views
    ஏமனில் ஒரே வாரத்தில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம்: சவூதி அரேபியாவின் மனிதாபிமானப் பணிகள் தீவிரம்!

    ரியாத் வந்தடைந்த தான்சானியா இரட்டையர்கள்: சவூதி அரேபியாவில் அறுவை சிகிச்சைக்கான பரிசோதனை!

    • By Admin
    • January 27, 2026
    • 21 views
    ரியாத் வந்தடைந்த தான்சானியா இரட்டையர்கள்: சவூதி அரேபியாவில் அறுவை சிகிச்சைக்கான பரிசோதனை!

    ஏமனில் 70 மின் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தொடங்கியது: சவூதி அரேபியாவின் 81 மில்லியன் டாலர் உதவித் திட்டம்!

    • By Admin
    • January 27, 2026
    • 28 views
    ஏமனில் 70 மின் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் தொடங்கியது: சவூதி அரேபியாவின் 81 மில்லியன் டாலர் உதவித் திட்டம்!

    சவூதி – போலந்து ‘ஒருங்கிணைப்பு கவுன்சில்’ அமைப்பு: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் குறித்து அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் முக்கிய அறிவிப்பு!

    • By Admin
    • January 27, 2026
    • 22 views
    சவூதி – போலந்து ‘ஒருங்கிணைப்பு கவுன்சில்’ அமைப்பு: ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஏமன் குறித்து அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் முக்கிய அறிவிப்பு!

    தெற்கு காசா மாணவர்களுக்கு சவூதி அரேபியாவின் குளிர்கால அரவணைப்பு

    • By Admin
    • January 27, 2026
    • 19 views
    தெற்கு காசா மாணவர்களுக்கு சவூதி அரேபியாவின் குளிர்கால அரவணைப்பு